இடுகைகள்

2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காட்டுச் சிறுக்கியே...!

படம்
காட்டுச் சிறுக்கியே... என்னை கட்டிப் போனதென்னடி... கம்புக் காட்டுக்குள்ள  சோளம் என்னை தின்னுதோ... சோளப்பொறியா நீயும் என்னை பொறித்து தள்ளுறியே... நானும் உன்னில் நெருப்பில் வாட்டிய சோளமாய் மொரு மொருனு தான் இருக்கேன் வந்து தின்னுட்டு போயேன்டி... நிலவும் சுடுதே நித்தம் உன்னை ரசிப்பதால்... பங்குனியும் குளிருதே உந்தன் நெருக்கம் என்னை வாட்டுவதால்... சித்திரையில் பூ முடித்த பெண்ணே நித்திரையிலும் நானே உன்னோடு... நீங்காத எண்ணங்களாய் நீயும் என் நெஞ்சின் நினைவுகளோடு... அதிகாலை பூத்த மலரே சூரியனும் ஒளிந்து கொள்ளுதே உந்தன் பரிசமெனும் புன்னகை தேசத்தில்... எந்தன் நேசத் திரவியமே திகட்டாத தென்றலாய் நீயும் பேச பேச  தேன் இனிக்குதே எந்தன் காதில்... நித்தமும் நீயே வேண்டும் என் உயிரோடு உறவாட... உள்ளம் எனும் காட்டினிலே விளக்கேற்ற வந்த காட்டுச் சிறுக்கியே...!

காட்டு பூவே

படம்
காதோரம் கதை பேசி               காத்தோடு கரைந்தவளே... கண்ணம் நிறைய கைப்பட்டு               கனவோடு தொலைத்தவளே... காண்கின்ற யாவும் நீயாக              கனவில் தெரிகிறாய் உயிராக... காட்டுப் பூவும் மலர்ந்ததடி              காட்டுச் சிருக்கி கைப்பட்டு... கதவுகள் திறந்தே இருக்கிறது              கானா குயிலே உனக்காக... கவிதைகள் பாடி கழித்திடுவேன்              கண்ணே உன்னை காணும் வரை...

காதல் கயிறு

படம்
அடியே..! அடியே..!  என்னோடு நீயும்          உன்னோடு நானும் கைகளை கோர்த்து          வானம் தூரம் போவோம்..! கண்ணோடு காதல் பேசி          கனவோடு காமம் தளர்த்து விண்ணோடும் மண்ணோடும்          காலம் கடந்து செல்வோம்..! உனக்காக நானும்          எனக்காக நீயும்  வாழும் காலம்           உணர்வோடு கலந்து உறைவிடம் இங்கே          உள்ளம் மட்டும்  கொள்ளை போனதே..!     .....காற்றின் கயிற்றில்....

கோகிலம்

படம்
வானம் பார்த்து பாடும்  கோகிலமே... வந்து இங்கு என்  குமரி பாடும் தென்றலை பார் உன் குரல் இனிதின்  ஆங்காரத்தை உடைத்தெரியும்  என் குமரி பெண்ணின்  குதுகலத்தை பார்..

ஆழி

படம்
தோழியே... விட்டு விடு போகட்டும் வழி தெரியா விட்டிலை, விண்ணையும் மண்ணையும் தொட்டு போகும் மேகத்திடம் கொட்டிவிடு உன் கஷ்டங்களை மழை நீராய் போகட்டும் பார் எங்கும் பரணி ஆண்ட தேர் வீதி எங்கும் குமரி முதல் இமயம் வரை அறியட்டும் உம் கஷ்டத்தின் வேதனையை ஆழி பார் எங்கும் பொங்கி அழியட்டும்  உன் பேர் ஒலிக்கட்டும்..

விதி

படம்
தோழியே  நீ வரும் வழியில்  விதிகள் வாங்கும்  கடை இருந்தால் பார்த்து வா என்னிடம்,  எண்ணில் அடங்கா  விதிகள்  விளையாடுகின்றன வாழ்வில், விற்றுவிடலாம் கலப்படமற்றது...

எதிர் நோக்கி

படம்
கொட்டும் மழைத்துளி நீயாக குளிரும் வெண்பனி நானாக தூரம் இருந்தே ரசிக்கிறேன்..! சுற்றித் திரியும் என் கால்களும் சுற்ற மறந்து கிடக்கிறதே..! திசைகள் ஏழாயினும் எட்டாம் திசையாய் என் பார்வை உன்னை நோக்கியே இருக்கிறது விழி மூடியே கிடக்கிறேன் விண்ணையும் தாண்டி வருவாய் எனும் சிறு நம்பிக்கையில்.. நொடி பொழுதும் தவராமல் கண்கள் இரண்டும்  கைபேசியையே எடுத்து பார்கிறது.. உன்னிடமிருந்தேனும் குருஞ்செய்தி  வந்துவிடாதா என்ற பேராசையின் மகிழ்வில்.. உன்னையே எதிர் நோக்குகிறேன் எதிரில் பார்க்க...!

என் நினைவில் அவள்

படம்
கடற்கரை மணலில் பதிந்துடும் கால் தடங்களை போலே... ஓர் கணம் நெஞ்சில் வந்து செல்கிறாய்... இதழ் கொஞ்சம் பேசும் புன்னகையை போலே... நீலகடல் கரையில் அலைகளோடு கரைந்து போகிறாய்... மனம் கணக்கும் நினைவுகளோடு விழி சுமக்கும் கண்ணீராய் புதைந்து போகிறாய்... நீ ஓர் தினம் காதல் பூக்கிறாய் என் மறுதினம் கனவில் தொலைகிறாய்... இந்நிமிடம் நீர் நிறைந்திடும் கடலாய் என் மனம் நிறைந்திடும் நீயாய் எனக்கென மலர்ந்திடுவாயோ...

உறவே..!

படம்
உறவே..! என் உறவே..! என் இதயத்தை தொலைத்தேனே..! அடடா..! இந்த நொடி - என் உணர்வையும் தொலைத்தேனே..! இந்த கனவு தான் நீளுதே பொழுது முடியும் முன்  வந்துவிடு நேரிலே..! உன்னை காணவே  காத்திருக்கிறேன் காலமெனும் கரையிலே..! என் உயிரே..! உன் அருகே என்னை நீயும் காண்பாயா  உனதருகே என் ஜீவன் உலாவுதடி..! எனக்கான விடியல் - உன்  மடியில் உள்ளதடி..! உன்னை தவிர எனக்கு இங்கு  யாரடி துணை உயிரே..! கண்களின் ஓரமாய் கண்ணீர் துளிகள் உன்னை காணாமல் - என்  மனதின் மத்தியில் உயிர் துளிகள்..!

தஞ்சம்

படம்
தூரம் போகும் சித்திரை பெண்ணே துடித்து போகிறதே என் நெஞ்சம் நகரும் இந்த நிமிடம்  இப்படியே இருந்துவிடாதா அன்பே..! இமைகளின் மீது நீயே வாழ்கின்றாய் நித்தம் உன்னையே காண்கின்றேன் விழி மூடா கனவிலும்..! சற்றே கண்களைத் திற என்னை சிறையிட்டு பின் மூடிக்கொள் உன் விழியோரத்தில்..! காதல் என்னும் என் கவிகளில் கசையடியாய் உந்தன் நினைவுகளை நெஞ்சம் எங்கும் பதிய வைத்தாயே..! கொஞ்சமும் மிஞ்சாத நம் உறவில் நெஞ்சம் தாண்டி மஞ்சம் வளர்த்தவளே ஒரு கணம் திரும்பி பாரடி தஞ்சம் அடைகிறேன் உன்னிடம் நானே..!

ராதை அவள்

படம்
விழி விழி பார்வை விட்டு நகரும் பொழுதில்  நீங்கா உணர்வில் தொட்டுப்போகும் கனவாய் காதல் ரசம் கூடுதே சொல்லாமல் சொல்லுதடி உந்தன் காதலை..! இமைக்கா உன் பெருவிழிகள் இரண்டிலும் மயங்கி இசைக்குதே எந்தன் நாவும் புல்லாங்குழல் வழியே  உன் குரல் இனிமையை அறிய இதழ் ஊற்றில் நனைய முற்படுகையில் ராதையே கலைந்து போனாயடி - என் கண்களின் நீர் திவலைகளாய்...!

கனவு

பூக்கள் பூக்கின்ற ஓசையிலே புன்னகை தழுவுகிறது என் இதயம் பூவை தேடிய வண்டாய் உன்னை தேடும் நானாய் கனவோடு காதல் கொள்கிறேன் கரம் நீட்டி ஏற்பாயா அன்பே தோள் மீது சாய்ந்து துயில் கொள்ள வேண்டும் மடிமீது சரிந்து  மரணமடைய வேண்டும் நாளும் உன் நினைவில்..

காதலின் புரிதல்...

ஆயிரம் தான் ஆசை வச்சேன் அவ கூடையே வாழ நினச்சேன் உயிரே நீதானு உறக்க கூறினேன்.. ஊமை விழிகளை தூது அனுப்பினேன்..! எண்ணங்கள் ஆயிரம் - அதில் அவளின் நினைவுகள் மட்டும் வண்ணங்கள் நிறைந்த வாழ்கையை கருப்பு வெள்ளையாய் மாற்றிபோனாயடி.. ஜென்மங்கள் தாண்டியும்  கூடிட ஆசை கொண்டேன்..! கூத்தாடியாய் தெருவில் விட்டாயடி.. என் உயிர் போனபின்னே புரியட்டும்.. எந்தன் உண்மை காதல்...

எந்தன் காதல் உயிரே

கவியின் காதலியே  மீனம்மா..! மீனம்மா..! தீராத காதல் தீயே  என் செல்லம்மா..!செல்லம்மா..! உன் நினைவில் மயங்கி விழுந்து என் மனதை தொலைக்கிறேன்..! என் கனவில் உன்னை கண்டு எந்தன் சோகம் தொலைக்கிறேன்..! மீனம்மா மீனம்மா  என் உயிரின் கைபிடி நீயம்மா  கண்களின் ஓரம் கசியும்  கண்ணீர் துளியும்..! உன் விரல் பிடித்து நடக்க என் உணர்வும் துடிக்கிறது..! அந்தி மாலைப்பொழுதில் மலைச்சாரல் வீசுகையில்  மனம் என்னவோ  மீனம்மா..! மீனம்மா..!  என்றே கதறுகிறது கதறும் மனமும்  கரையும் குணமும்  உன்னில் பிறந்து  என்னில் முடிகிறது..!  காதல் என்னும் கரும்பு தின்ன  என் மனம் ஏங்கித் தவிக்கிறது..! மீனம்மா - என் உணர்வின்  விழிம்பில் நீயும் உயிரை பறிக்கிறாய்..! உன் மடியில் பிறந்து தவழும் சிறுபிள்ளையாய் உன் மேல் நான் கட்டித்தழுவ ஆசை கொண்டேன்..! எட்டிப் பிடித்து நிலவையும் உன் காலடியில் கிடத்துவேன்..! வானவில்லையும் கொண்டு வந்து வர்ண சேலையாய் சார்த்திடுவேன்..! மின்னலைப் பிடித்து  மின்மினிப் பூச்சியாய்  விளையாட  உன் கையில் தந்திடுவேன்..! சோகம் மறந்து நடக்க  சோலைவனக் கிளியை பாடச்செய்திடுவேன்..! பருவமடைந்த மங்கையாய்  உன்னை மலரச் செய்திடுவ

தேவதை

கனவு தேவதையே  நேரில் வந்தாயே..! உன் கண்ண பாத்து கலர பாத்து மயங்கி விழுந்தேனே..! கண்ணு பேசுதடி  உன் உதடும் பேசுதடி உன் உதட்டோரம் ஒழிந்திருக்கும்  புன்னகையும் பேசுதடி..! இருளில் பிறந்த நிலவே என் மனதை துளைத்த கனவே..! காதல் பேசும் கண்களும்  என் மனதை தட்டுகிறதே..! கருவிழி உனது அந்த இமைகளும் எனது இடைவிடாமல் துடிக்கும் புருவத்தின் மத்தியில் உன்னை தாளாட்டும் வெள்ளை தொட்டில் நான்

என் தோழி

என் உணர்வில் பிறந்த  புது வசந்தமே.. புன்னகை பூத்திடும்  பூக்களின் அரசியே... உன் உறவும் உயிரும்  எனக்கான ஒன்று.. உன்னை நித்தமும் நேசிப்பேன் தினமும் சுவாசிப்பேன்.. கடந்த கால நினைவெல்லாம்  கனவாய் போகட்டும் நிகழ்கால வசந்தமாய் - நம் நட்பு மட்டுமே மலரட்டும்.. உன்னை விட  சொந்தம் ஏதும் எனக்கில்லை நட்பின் மூச்சு காற்றாய் நாமே சுதந்திரமாய் பறந்திடுவோம் என்னாளுமே...

அவளை_தேடி

விழி தேடி வழி தேடி போகும் பாதையில உன்ன கண்டதால்  என் நெஞ்சம் கிரங்கிடுசே.. உறவெள்ளாம் நீதானு எண்ணுகையில் உள்ளம் தடுமாறி போனதென்னவோ... சித்தனவாசல் ஓவியமும் உன் பேர பச்சளை தீட்டியதோ.. என் நெஞ்சு உன் நெஞ்ச அறிந்திடவே காலம் கடந்தும் பயணிக்கிறது.. நீள்கின்ற பாதையெல்லாம்  பாவி மனம் பறக்கிறதே.. உன்னையே எண்ணியே இத்தனைனால் காலம் முழுவதும் தேடுகிறது... இப்போது நீ இங்கு கிடைத்திருந்தும் எப்போது என்னை ஏற்பாயோ... உனக்காக நெடுநாளும் இருந்திடுவேன் உன்னை மணக்காமல்  என் உயிர் எனை விட்டு நீங்கிடாது...

அ.....ஃ

அங்கும் மிங்கும்  ......அலைந்த கண்களே ஆயிரம் நிமிடம் ......தேடியது என்ன இனிதாய் பூத்த இழமலரில் ......இன்பம் மிகுந் தோடியது என்ன ஈகை கண்டு ......விழிகள் கலங்கியதென்ன உண்மை அறிந்து ......உலகம் தெளிந்து என்ன ஊமைகள் பேசிவிட்டால் ......ஊரும் உலகும் உருகிதான் போகும் எண்ணிப்பார் ......அர்த்தங்கள் விளங்கும் ஏற்போர் உள்ளம் ......உறைந்து தான் போகும் ஐவினை அனைத்தும் ......அறம் பேசும் ஒன்றாய் நின்றால் .......எதிர்த்து விடுவோம் ஓரமாய் நின்றால் .......ஒழிந்துவிடுவோம் ஔடதம் பேசு .......ஓவியமாய் வாழ்வோம் அஃதே சிறப்புடன் ......மகிழ்வுருவோம்

எல்லாம் நன்மைக்கே

எனக்கான உலகில் யாரும் இல்லை யாருக்காகவும் நான் தேவையும் இல்லை புரிந்து கொண்டேன் சமுகத்தை தெரிந்து கொண்டேன் என் எதிர் காலத்தை விட்டு விடுங்கள் என்னையும் என் உணர்வின் உயிரையும் எதிர் பார்த்தே வாழ்ந்துவிட்டேன் எதிரில் பார்க்க மறந்துவிட்டேன் விழித்து கொண்டேன் என் மடத்தனத்தை உடைத்துவிட்டேன் நான் என் வாழ்வு..! விதியென போகட்டும்..! எல்லாம் நன்மைக்கே..!

காத்திரு..!

விடை மட்டுமே தெரிந்த விசித்திர பதுமை நான்.. பால் சுரக்கும் பசுவும் சினம் கொள்ளும் என தெரிந்தவள் நான்.. ஏனோ அறிய மறந்தேன் மானுட பிறவிகள் நம்மை  ஆட்கொள்ளும் - அதில்  புழுவாய் சிக்கி சிதைவோம் என.. எத்தனை எத்தனை துன்பங்கள் துயர் துடைக்கும் கரங்களும்  சூழ்நிலை கைதியாய் சிக்குண்டுள்ளதே.. கலங்காதே என் நெஞ்சமே காத்திருப்போம்..! காலம் வரும்..! எனக்கான விடியல் விருச்சம் பெரும்.. கவி சக்கரவர்த்தியாய்..! காலை கதிரவனாய்..! ஒரு நாள் விடிந்தே தீரும்..! காத்திருப்போம்..! கவியின் கரங்களோடு..!

தவ புதல்வி

மழலை மொழி மாறாது வாய் மொழி கீற்றே..! வளம் தரும் மாதவ மாதத்தில் பிறந்த அற்புத ஊற்றே..! தாய் மாமன் பெற்றெடுத்த தவ புதல்வியே..! இளவேனில் காற்றாய் எட்டுத்திக்கும் இசைக்கட்டும் - உன்  இனிமைமாறா அமுத மொழிகள்..! கவிபாடும் நிலவு  கண்களுக்குள்  ஒளிபாடும் கார்த்திகையாய் ஜொலிக்கட்டும் என்றென்றும்..! நந்தவன ரோஜாக்கள் மத்தியில் பால்வண்ண பற்களாய் பளிச்சிடும் பொன்ன(ந)கையே..! இன்று போல் என்றும் பச்சிளம் மாறாத குணமாய் பூத்துக்குழுங்கும் புன்னகையாய் பாரதி கண்ட புதுமை பெண்ணாய் பாருக்கும் பேர் சொல்லும் பார்கடல் செல்வியாய் வாழ்ந்திட எனது பிறந்த நாள் வாழ்த்துகள்..! "எனது அன்பு மாமன் மகளே கீர்த்தி"

செல்லம்

காத்திருக்கும் பூவே காவியத்தின் நாவே பூத்திருக்கும் மனதுள் குடிகொண்டவன் யாரோ.. பார்த்திருக்கும் பொழுதில் பகலவனின் கதிர்கள் உனை சேர்த்து அணைத்ததினால் ஒளிமலரானாயோ. வீசீடும் காற்றும் உன்முகம் தழுவியதால் வாசனை பெற்றதுவோ. வாரி மகிழ்ந்ததுவோ.. நேசமங்கை நின் நிழலில் நின்றாடும் தமிழ்மங்கை பாசம் உரைத்தாளோ பாமாலை தந்தாளோ. உன்வதனம் கண்டீடவே மேகத்துள் போட்டியோ மேனி உரசலுக்குள் இடிச் சப்தம் கேட்கிறதே. மின்னலை ஏன் சிறையிட்டாய். விட்டுவிடு பாவம் உன் இதழ்கீற்று புன் சிரிப்பில் கிரங்கிக் கிடக்கிறது என்றும் அந்த சிரிப்பு மலர வாழ்த்துக்கள் செல்லம் 

உந்தன் மடியில்

காற்றில் கரைந்த கனவாய்... கையில் வரைந்த ஓவியமாய்.. காலமும் உன்னில்.. கறை தொட்டு செல்லும் கடலலையாய்... கொஞ்சிகொண்டே இருக்க வேண்டும்.. நாளும் உந்தன் மடியிலே பிறக்கும் குழந்தையாய்....

எதிர் நோக்கி

மனமே மனமே மன்னிப்பாயோ..!உன்னை இழந்தேன் தண்டிப்பாயோ..! மனமே மனமே மன்னிப்பாயோ..! உன்னை இழந்தேன் தண்டிப்பாயோ..! அட நீ தானே எந்தன் உலகம்        உனை நீங்கி எங்கே போவேன் நானும் இந்த மண்ணுலகிலே, மனமே மனமே மன்னிப்பாயோ..! உன்னை இழந்தேன் தண்டிப்பாயோ..! காற்றாய் வந்தவளே என் சுவாசம் நிறைந்தவளே   சுமை தாங்கி நிற்கின்றேன் மனம் இறங்கி வா நிலவே.. இரவுக்கு பிறை இல்லாமல் சந்திரன் பிறப்பதில்லை   இங்கு யாருக்கும் குறையில்லாமல் எதுவும் கிடைப்பதில்லை மனம் நிறைந்த வேதனைகளை தலையனை அறியும்    உன் மீது கொண்ட காதலை இங்கு யார் தான் அறிவார் உன்னை விட்டுச்சென்றால் எனக்கு வாழ்க்கை இல்லை   மனமே மனமே மன்னிப்பாயோ..!   உன்னை இழந்தேன் தண்டிப்பாயோ..! வாழ்க்கை எனும் தேரிலே    ஏரி பயணிப்போம் ஊரிலே      உலகம் சொல்லும் வார்த்தையை   ஊமையாக்குவோம் தரணியிலே.. எனக்காக நீ இருந்தால் உன் அன்பெனும் மாளிகையில் வாழ்ந்தே இறப்பேன்..! உனை எதிர் நோக்கி...

என்னில் நீ

வானம் தொடாத மேகங்கள் வர்ணம் பூசாத வானவில் மழைத்துளி விழாத மண்வாசனை புயலாய் வந்த தென்றல் பூக்கள் மலராத சுவாசம் வண்டுக்கள் அருந்தாத தேன் மௌனம் நிறைந்த கவிதை எதிர்பாராத வாழ்க்கை அத்தனையும் ஒரே ஜென்மத்தில் முடிந்துவிட்டது என எண்ணுகையில் விருச்சமாய் முளைத்த - என் வாழ்வின் மிச்சம் என்னில் உறைந்த நீ..

உள்ளம்

 உன்னாலே வாழ்ந்தேன் நானே..! உன் உணர்வோடும் உயிரோடும் கலந்தேன் நானே..! உன் முகம் காணாமல் இருந்ததே இல்லை இன்று கனவிலும் தொலைத்தேன் உன்னை.. அலாரம் வைத்தும் எழுந்ததும் இல்லை சேவல் கூவியும் எழுந்ததும் இல்லை உன் குறல் கேட்டே விடியும் என் பொழுது உனக்காக என் உயிரையும் தருவேன் என்றேன் இன்று உனை நீங்கி என் உயிர் யாருக்கு இருக்கிறது.. எழும்பில்லா நாக்கு எப்படியும் பேசும் நீயா பேசியது என்று நாக்கும் கேட்கும்.. என் உயிரிலே கலந்த உன்னை உடலை பிரித்து உலகம் தனித்து பிரிந்தேன் இன்று...