இடுகைகள்

மே, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எல்லாம் நன்மைக்கே

எனக்கான உலகில் யாரும் இல்லை யாருக்காகவும் நான் தேவையும் இல்லை புரிந்து கொண்டேன் சமுகத்தை தெரிந்து கொண்டேன் என் எதிர் காலத்தை விட்டு விடுங்கள் என்னையும் என் உணர்வின் உயிரையும் எதிர் பார்த்தே வாழ்ந்துவிட்டேன் எதிரில் பார்க்க மறந்துவிட்டேன் விழித்து கொண்டேன் என் மடத்தனத்தை உடைத்துவிட்டேன் நான் என் வாழ்வு..! விதியென போகட்டும்..! எல்லாம் நன்மைக்கே..!

காத்திரு..!

விடை மட்டுமே தெரிந்த விசித்திர பதுமை நான்.. பால் சுரக்கும் பசுவும் சினம் கொள்ளும் என தெரிந்தவள் நான்.. ஏனோ அறிய மறந்தேன் மானுட பிறவிகள் நம்மை  ஆட்கொள்ளும் - அதில்  புழுவாய் சிக்கி சிதைவோம் என.. எத்தனை எத்தனை துன்பங்கள் துயர் துடைக்கும் கரங்களும்  சூழ்நிலை கைதியாய் சிக்குண்டுள்ளதே.. கலங்காதே என் நெஞ்சமே காத்திருப்போம்..! காலம் வரும்..! எனக்கான விடியல் விருச்சம் பெரும்.. கவி சக்கரவர்த்தியாய்..! காலை கதிரவனாய்..! ஒரு நாள் விடிந்தே தீரும்..! காத்திருப்போம்..! கவியின் கரங்களோடு..!

தவ புதல்வி

மழலை மொழி மாறாது வாய் மொழி கீற்றே..! வளம் தரும் மாதவ மாதத்தில் பிறந்த அற்புத ஊற்றே..! தாய் மாமன் பெற்றெடுத்த தவ புதல்வியே..! இளவேனில் காற்றாய் எட்டுத்திக்கும் இசைக்கட்டும் - உன்  இனிமைமாறா அமுத மொழிகள்..! கவிபாடும் நிலவு  கண்களுக்குள்  ஒளிபாடும் கார்த்திகையாய் ஜொலிக்கட்டும் என்றென்றும்..! நந்தவன ரோஜாக்கள் மத்தியில் பால்வண்ண பற்களாய் பளிச்சிடும் பொன்ன(ந)கையே..! இன்று போல் என்றும் பச்சிளம் மாறாத குணமாய் பூத்துக்குழுங்கும் புன்னகையாய் பாரதி கண்ட புதுமை பெண்ணாய் பாருக்கும் பேர் சொல்லும் பார்கடல் செல்வியாய் வாழ்ந்திட எனது பிறந்த நாள் வாழ்த்துகள்..! "எனது அன்பு மாமன் மகளே கீர்த்தி"

செல்லம்

காத்திருக்கும் பூவே காவியத்தின் நாவே பூத்திருக்கும் மனதுள் குடிகொண்டவன் யாரோ.. பார்த்திருக்கும் பொழுதில் பகலவனின் கதிர்கள் உனை சேர்த்து அணைத்ததினால் ஒளிமலரானாயோ. வீசீடும் காற்றும் உன்முகம் தழுவியதால் வாசனை பெற்றதுவோ. வாரி மகிழ்ந்ததுவோ.. நேசமங்கை நின் நிழலில் நின்றாடும் தமிழ்மங்கை பாசம் உரைத்தாளோ பாமாலை தந்தாளோ. உன்வதனம் கண்டீடவே மேகத்துள் போட்டியோ மேனி உரசலுக்குள் இடிச் சப்தம் கேட்கிறதே. மின்னலை ஏன் சிறையிட்டாய். விட்டுவிடு பாவம் உன் இதழ்கீற்று புன் சிரிப்பில் கிரங்கிக் கிடக்கிறது என்றும் அந்த சிரிப்பு மலர வாழ்த்துக்கள் செல்லம் 

உந்தன் மடியில்

காற்றில் கரைந்த கனவாய்... கையில் வரைந்த ஓவியமாய்.. காலமும் உன்னில்.. கறை தொட்டு செல்லும் கடலலையாய்... கொஞ்சிகொண்டே இருக்க வேண்டும்.. நாளும் உந்தன் மடியிலே பிறக்கும் குழந்தையாய்....