காதல் உன்னுள் வரும் வரை நீயாக இருப்பாய்... உன்னுள் நுழைந்ததும் தீயாக மாறுவாய்... கணக்கு வழக்குயில்லாமல் கவிதைகள் புனைவாய் இலக்கணம் இலக்கியம் பயிலாமல் இதிகாசங்கள் படைப்பாய்...! தேர்வினில் கூட இலக்கணப்பிழை இருக்கும் உன் கவிதைகளில் இருக்காது.....! உன்னையே அறியாமல் உனக்குள்ளே ஒரு ஒளிர்வட்டம் தோன்றும்... அது உந்தன் எதிர்கால வட்டமாகும்...! அவளின் புன்னகையில் மாட்டி தவிக்கும் உணர்வில்லா விட்டில் பூச்சி நீ.......! அவளிடம் சோர்வின்றி பேசுவாய் அவளின் வாக்கு உனக்கு மெய்யாக தோன்றும் அவளின் குரல் குயிலின் குரலை விட இனிமையாக தோன்றும்...........! மங்கையரின் காதல் மங்காத விளக்குகள்....... அதில் சுடர் விட்டு எறியும் தீபம் ஆண்களின் காதல்.....
அடியே...! என் மனதை கொள்ளை கொண்டவளே... உன் இமைகளின் துடிப்பு, காதோரம் ஆடும் ஜிமிக்கி, ஆரஞ்சு பழச்சுளை போன்ற உன்னிரு இதழ்கள், வெள்ளை நிலாவிற்குள் கருப்பு பழிங்குகல் போன்ற கண்கள், கருமை நிறைந்த அடர்த்தியும் நீளமும் உடைய கூந்தழ், கொஞ்சமும் சத்தம் கேட்காத புன்னகை, வஞ்சம் இல்ல அழகு, பார்த்தவுடன் ஆர்பரிக்கும் உள்ளம், என் மனச தொலைத்தாயடி.....! அடியே.....! அடியே....! உன் வழிகளின் பார்வையில் மயங்காத ஆண்கள் இல்லையடி, கண்களில் கொண்ட கவர்ச்சியும் உடம்பில் கொண்ட காம உணர்ச்சியும் உன்னை கண்டதும் என் மனதை ஆர்பரித்து விட்டது அழகே........! மொத்தத்தில் நீ செதுக்கி வைத்த செப்பு சிலையடி .............!
அந்தி பொழுதில் ஆகச வானில் எந்தையும் என் மனதையும் திருட....! கணநேரமும் கவியமுதை உட்கொண்டபடியே என்னை தொடரும் உந்தன் நினைவுகள்.....! நீயே, என் அன்பின் உணர்வையும் யான் உன் மீது கொட்ட காதலின் பரிசத்தையும் என் விழிகள் இடைவிடாது - உன் வரவையே எதிர்நோக்கிறது என்றுனர்வாயோ...! காதலின் மதி மயக்கத்தில் கள்வா உந்தன் பாதம் பணிந்தேன்...! உள்ளுணர்வில் மகுடம் சூட்டிய மன்னவா எந்தன் மனதை கொள்ளை கொண்ட என்னவா...! துள்ளி துள்ளி திரிந்த என் மனதை துவண்டு போக செய்ததுடா உன் பிம்பம்...! தூரிகையில் வரைந்த உன் உருவத்தை தேடி அலையுதடா என் கண்கள்...! கண்டேன் கண்டேன் கனவில் கண்டேன் காலம் கடந்தும் நேசித்த உன்னை....! ஏங்கி ஏங்கி தினமும் செத்தேன் உனை நேரில் காணும் தினத்தை எண்ணி...!
கருத்துகள்