தவ புதல்வி

மழலை மொழி மாறாது
வாய் மொழி கீற்றே..!
வளம் தரும் மாதவ மாதத்தில்
பிறந்த அற்புத ஊற்றே..!
தாய் மாமன் பெற்றெடுத்த
தவ புதல்வியே..!
இளவேனில் காற்றாய் எட்டுத்திக்கும்
இசைக்கட்டும் - உன் 
இனிமைமாறா அமுத மொழிகள்..!
கவிபாடும் நிலவு கண்களுக்குள் 
ஒளிபாடும் கார்த்திகையாய்
ஜொலிக்கட்டும் என்றென்றும்..!
நந்தவன ரோஜாக்கள் மத்தியில்
பால்வண்ண பற்களாய்
பளிச்சிடும் பொன்ன(ந)கையே..!
இன்று போல் என்றும்
பச்சிளம் மாறாத குணமாய்
பூத்துக்குழுங்கும் புன்னகையாய்
பாரதி கண்ட புதுமை பெண்ணாய்
பாருக்கும் பேர் சொல்லும்
பார்கடல் செல்வியாய் வாழ்ந்திட
எனது பிறந்த நாள் வாழ்த்துகள்..!
"எனது அன்பு மாமன் மகளே கீர்த்தி"




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அழகு

ஆண்களின் காதல்

காத்திருக்கிறேன்