ராதை அவள்

விழி விழி பார்வை
விட்டு நகரும் பொழுதில் 
நீங்கா உணர்வில்
தொட்டுப்போகும் கனவாய்
காதல் ரசம் கூடுதே
சொல்லாமல் சொல்லுதடி உந்தன் காதலை..!
இமைக்கா உன் பெருவிழிகள் இரண்டிலும்
மயங்கி இசைக்குதே எந்தன் நாவும்
புல்லாங்குழல் வழியே 
உன் குரல் இனிமையை அறிய
இதழ் ஊற்றில் நனைய முற்படுகையில்
ராதையே கலைந்து போனாயடி - என்
கண்களின் நீர் திவலைகளாய்...!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆண்களின் காதல்

அழகு

அவளின் ஏக்கம்