இடுகைகள்

ஆகஸ்ட், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காட்டுச் சிறுக்கியே...!

படம்
காட்டுச் சிறுக்கியே... என்னை கட்டிப் போனதென்னடி... கம்புக் காட்டுக்குள்ள  சோளம் என்னை தின்னுதோ... சோளப்பொறியா நீயும் என்னை பொறித்து தள்ளுறியே... நானும் உன்னில் நெருப்பில் வாட்டிய சோளமாய் மொரு மொருனு தான் இருக்கேன் வந்து தின்னுட்டு போயேன்டி... நிலவும் சுடுதே நித்தம் உன்னை ரசிப்பதால்... பங்குனியும் குளிருதே உந்தன் நெருக்கம் என்னை வாட்டுவதால்... சித்திரையில் பூ முடித்த பெண்ணே நித்திரையிலும் நானே உன்னோடு... நீங்காத எண்ணங்களாய் நீயும் என் நெஞ்சின் நினைவுகளோடு... அதிகாலை பூத்த மலரே சூரியனும் ஒளிந்து கொள்ளுதே உந்தன் பரிசமெனும் புன்னகை தேசத்தில்... எந்தன் நேசத் திரவியமே திகட்டாத தென்றலாய் நீயும் பேச பேச  தேன் இனிக்குதே எந்தன் காதில்... நித்தமும் நீயே வேண்டும் என் உயிரோடு உறவாட... உள்ளம் எனும் காட்டினிலே விளக்கேற்ற வந்த காட்டுச் சிறுக்கியே...!

காட்டு பூவே

படம்
காதோரம் கதை பேசி               காத்தோடு கரைந்தவளே... கண்ணம் நிறைய கைப்பட்டு               கனவோடு தொலைத்தவளே... காண்கின்ற யாவும் நீயாக              கனவில் தெரிகிறாய் உயிராக... காட்டுப் பூவும் மலர்ந்ததடி              காட்டுச் சிருக்கி கைப்பட்டு... கதவுகள் திறந்தே இருக்கிறது              கானா குயிலே உனக்காக... கவிதைகள் பாடி கழித்திடுவேன்              கண்ணே உன்னை காணும் வரை...

காதல் கயிறு

படம்
அடியே..! அடியே..!  என்னோடு நீயும்          உன்னோடு நானும் கைகளை கோர்த்து          வானம் தூரம் போவோம்..! கண்ணோடு காதல் பேசி          கனவோடு காமம் தளர்த்து விண்ணோடும் மண்ணோடும்          காலம் கடந்து செல்வோம்..! உனக்காக நானும்          எனக்காக நீயும்  வாழும் காலம்           உணர்வோடு கலந்து உறைவிடம் இங்கே          உள்ளம் மட்டும்  கொள்ளை போனதே..!     .....காற்றின் கயிற்றில்....

கோகிலம்

படம்
வானம் பார்த்து பாடும்  கோகிலமே... வந்து இங்கு என்  குமரி பாடும் தென்றலை பார் உன் குரல் இனிதின்  ஆங்காரத்தை உடைத்தெரியும்  என் குமரி பெண்ணின்  குதுகலத்தை பார்..

ஆழி

படம்
தோழியே... விட்டு விடு போகட்டும் வழி தெரியா விட்டிலை, விண்ணையும் மண்ணையும் தொட்டு போகும் மேகத்திடம் கொட்டிவிடு உன் கஷ்டங்களை மழை நீராய் போகட்டும் பார் எங்கும் பரணி ஆண்ட தேர் வீதி எங்கும் குமரி முதல் இமயம் வரை அறியட்டும் உம் கஷ்டத்தின் வேதனையை ஆழி பார் எங்கும் பொங்கி அழியட்டும்  உன் பேர் ஒலிக்கட்டும்..

விதி

படம்
தோழியே  நீ வரும் வழியில்  விதிகள் வாங்கும்  கடை இருந்தால் பார்த்து வா என்னிடம்,  எண்ணில் அடங்கா  விதிகள்  விளையாடுகின்றன வாழ்வில், விற்றுவிடலாம் கலப்படமற்றது...

எதிர் நோக்கி

படம்
கொட்டும் மழைத்துளி நீயாக குளிரும் வெண்பனி நானாக தூரம் இருந்தே ரசிக்கிறேன்..! சுற்றித் திரியும் என் கால்களும் சுற்ற மறந்து கிடக்கிறதே..! திசைகள் ஏழாயினும் எட்டாம் திசையாய் என் பார்வை உன்னை நோக்கியே இருக்கிறது விழி மூடியே கிடக்கிறேன் விண்ணையும் தாண்டி வருவாய் எனும் சிறு நம்பிக்கையில்.. நொடி பொழுதும் தவராமல் கண்கள் இரண்டும்  கைபேசியையே எடுத்து பார்கிறது.. உன்னிடமிருந்தேனும் குருஞ்செய்தி  வந்துவிடாதா என்ற பேராசையின் மகிழ்வில்.. உன்னையே எதிர் நோக்குகிறேன் எதிரில் பார்க்க...!

என் நினைவில் அவள்

படம்
கடற்கரை மணலில் பதிந்துடும் கால் தடங்களை போலே... ஓர் கணம் நெஞ்சில் வந்து செல்கிறாய்... இதழ் கொஞ்சம் பேசும் புன்னகையை போலே... நீலகடல் கரையில் அலைகளோடு கரைந்து போகிறாய்... மனம் கணக்கும் நினைவுகளோடு விழி சுமக்கும் கண்ணீராய் புதைந்து போகிறாய்... நீ ஓர் தினம் காதல் பூக்கிறாய் என் மறுதினம் கனவில் தொலைகிறாய்... இந்நிமிடம் நீர் நிறைந்திடும் கடலாய் என் மனம் நிறைந்திடும் நீயாய் எனக்கென மலர்ந்திடுவாயோ...

உறவே..!

படம்
உறவே..! என் உறவே..! என் இதயத்தை தொலைத்தேனே..! அடடா..! இந்த நொடி - என் உணர்வையும் தொலைத்தேனே..! இந்த கனவு தான் நீளுதே பொழுது முடியும் முன்  வந்துவிடு நேரிலே..! உன்னை காணவே  காத்திருக்கிறேன் காலமெனும் கரையிலே..! என் உயிரே..! உன் அருகே என்னை நீயும் காண்பாயா  உனதருகே என் ஜீவன் உலாவுதடி..! எனக்கான விடியல் - உன்  மடியில் உள்ளதடி..! உன்னை தவிர எனக்கு இங்கு  யாரடி துணை உயிரே..! கண்களின் ஓரமாய் கண்ணீர் துளிகள் உன்னை காணாமல் - என்  மனதின் மத்தியில் உயிர் துளிகள்..!

தஞ்சம்

படம்
தூரம் போகும் சித்திரை பெண்ணே துடித்து போகிறதே என் நெஞ்சம் நகரும் இந்த நிமிடம்  இப்படியே இருந்துவிடாதா அன்பே..! இமைகளின் மீது நீயே வாழ்கின்றாய் நித்தம் உன்னையே காண்கின்றேன் விழி மூடா கனவிலும்..! சற்றே கண்களைத் திற என்னை சிறையிட்டு பின் மூடிக்கொள் உன் விழியோரத்தில்..! காதல் என்னும் என் கவிகளில் கசையடியாய் உந்தன் நினைவுகளை நெஞ்சம் எங்கும் பதிய வைத்தாயே..! கொஞ்சமும் மிஞ்சாத நம் உறவில் நெஞ்சம் தாண்டி மஞ்சம் வளர்த்தவளே ஒரு கணம் திரும்பி பாரடி தஞ்சம் அடைகிறேன் உன்னிடம் நானே..!

ராதை அவள்

படம்
விழி விழி பார்வை விட்டு நகரும் பொழுதில்  நீங்கா உணர்வில் தொட்டுப்போகும் கனவாய் காதல் ரசம் கூடுதே சொல்லாமல் சொல்லுதடி உந்தன் காதலை..! இமைக்கா உன் பெருவிழிகள் இரண்டிலும் மயங்கி இசைக்குதே எந்தன் நாவும் புல்லாங்குழல் வழியே  உன் குரல் இனிமையை அறிய இதழ் ஊற்றில் நனைய முற்படுகையில் ராதையே கலைந்து போனாயடி - என் கண்களின் நீர் திவலைகளாய்...!

கனவு

பூக்கள் பூக்கின்ற ஓசையிலே புன்னகை தழுவுகிறது என் இதயம் பூவை தேடிய வண்டாய் உன்னை தேடும் நானாய் கனவோடு காதல் கொள்கிறேன் கரம் நீட்டி ஏற்பாயா அன்பே தோள் மீது சாய்ந்து துயில் கொள்ள வேண்டும் மடிமீது சரிந்து  மரணமடைய வேண்டும் நாளும் உன் நினைவில்..