இடுகைகள்

2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காதலின் நிறம் கற்பனை..!

படம்
கனவு எனும் பெரும் உலகில் நான் கண்ட முதல் நாவல் அவள் முகம் எனும்  வண்ணக் கதிர், வாய்விட்டு வாசிக்க  வாய்ப்பை தேடி நித்தமும் மறைந்தே நின்றேன் அவள் பாதியில் விட்டுச்சென்ற  வெள்ளை புள்ளிகளின் ஓரத்தில்..! எத்தனை அதிசயம் வீட்டு வாசலில் அவள் கொட்டிவிட்டுச் சென்ற சுண்ணாம்பிலும் சித்திரமாய் காதல் பேசுதே..! ஹோ... இது தான்  யாருக்கும் கிடைக்காத  நாவிற்கினிய அவ்வையின் நெல்லியோ..! என்ன சொல்வது  என்னவளின் புன்னகை  காட்டும் ஓவியத்தின் வர்ணங்களை..! நான் மட்டுமே கண்டேன் அவளுடனான தனிமையின் பரிசத்தில் வண்ணங்கள் நிறைந்த அவளிடம் - நான் கண்டது நிறத்தை அல்ல பசுமை மாறா குணத்தின் இயல்புகளை..! ஆமாம்,  உலகில் வர்ணங்களே அதிகம் கண்ணுக்கு விருந்தாகின்றன, ஆனால் எனக்கு மட்டும் என்னவளே கவித்துவம் நிறைந்த மோனலிசாவின் ஓவியமாகிறாளே..! இதற்கு இயற்கையும் பெரும் சாட்சி சூரியனும் புறஊதா கதிர்களை  அகம் கொள்கிறது, சந்திரனும் இருளுக்குள் ஓடி மறைகிறது, வானவில்லும் ஏழு வழி சாலையாகிறது வர்ணங்களுக்கே வண்ணம் சேர்த்தவள் வீதியில் பவனி வரும் அழகில்..! என்ன செய்வது வண்ணங்களுக்கு நிறமானவள், என் எண்ணங்களுக்கு உரமானவள்..! ஒரு கணமேனும் கண்

நீ மறைக்கும் புன்னகையில்

படம்
வழிந்தோடும் நதியில்  மறைந்திருக்கும் பூ மகளே.. உன்னை கடக்கும் நேரமெல்லாம் நதியும் சற்றே  நின்று தான் போகிறது... ஒரு நொடி பொழுதேனும்  கண்டுவிட மாட்டோமா என்று நீ மறைக்கும் புன்னகையை... யாருக்கு தெரியும்..? நீ மறைப்பது உன் புன்னகையில்  என்னை தவிர  வேராரும் விழுந்துவிட  கூடாதென்பதற்கென்று..!

நீயும் நானும்

படம்
நீண்ட நீண்ட காலம்  நீயும் நானும் மட்டும்  நீந்தி போவோம்... நீரின் ஆழத்தை கடந்து, விரல் பிரியா இருக்கத்தில் உன்னை பிரியா நானாக என்னை பிரியா நீயாக காலம் கடந்தும்  பயணிப்போம் காலத்தின் ஓடத்தில்...

🔥சரணஜோதி🔥

படம்
வீசுகின்ற தென்றலில்  பூக்கின்ற மலர்களை போல் தூவுகின்ற மழைத்துளியில் விழுகின்ற முத்துகளை போல் புன்னகைகின்ற மதியின் பிராகாசிகின்ற பௌர்ணமியை போல் கொள்ளை கொள்ளும்  முத்துச்சிற்பி பவளவாய் செஞ்சுடரே... என் மனதை  மின்னல் போல் உள்ள  உந்தன் கருவிழி அம்புகள் தாக்குகின்றன... சற்றே ஒரு நொடி  கண்களை திசைமாற்று உயிர்பித்துக் கொள்கிறேன் உன் மேல் நான் கொண்ட  மோகத்தின் காதலை... கனவுகளில் கசிந்திடும்  கண்ணீர் துளிகளும்  சரணம் அடைகிறது ஜோதியின் பாதச்சுவடுகளில்... எந்தன் உள்ளம்  இத்தனை நாள் தேடியது  உன்னை போன்ற  ஓர் வெண்ணிற அரசிலங்குமரியை தானோ என்னவோ.. திசைகள் எட்டும் முட்டினாலும் மனம் என்னவோ வடக்கே தான் பாய்கிறது.. காத்திருப்பதும் ஓர் சுகமே காதலை விட காந்தம் போல் நம் நட்பு  ஆயிரம் ஆண்டுகள் கடந்தும்  தொடரும் என்ற ஓர் நம்பிக்கையின் விழிம்பில்  கவிஞன்...???

போதை

படம்
மனதின் வாசலில் மாஇலை தோரணம் அருகில் தேவதையின் கால் தடம் எனை வரவேற்க வந்த நிலவின் கூர்ந்த விழியால் அகம் கிழிந்து போனதே எங்கிருந்தோ வந்த மணம் எனை எட்டி எட்டி தேடசொல்லுதே.. மொட்டிலிருந்து பிறந்த மலரே அவள் புன்னகையில் நானும் கவிழ்ந்தனே பூமியும் இவள் முகம் கண்டுதான் சூழன்று போனதோ மது உண்ட மயக்கம்  மங்கையின் முகம் கண்டும் வருவது ஏனோ..? விரக்தியில் வீழ்ந்த என்னை  விழி கொண்டு உயிர்பித்தாலே எதை கண்டும் உறையாத உள்ளம் அவள் மதி கண்டு உறைவது ஏனோ..? விந்தைகள் ஆயிரம் கண்டும்  கலங்காத நெஞ்சத்தை வந்தவள் வியப்பை ஊட்டி சென்றாலே ஒற்றை நொடி புன்னகையில்..

வாழ்த்து

தென்றல் காற்றே  தென்றல் காற்றே வாழ்த்து சொல்லி நகருதே.. பூக்கள் மீது பன்னீர் போல தட்டி தழுவி போகுதே... வானம்,  மறைத்த மேகத்தில் கூட இங்கே நிலவும்  புதிதாய் பிறந்திருக்கு,  புது  வெள்ளை மழையும் அர்ச்சனை  தூவ காத்திருக்கு.. இந்த நேசம் ஒன்றே  போதுமடி  எந்தன் மாமன் பெற்ற  மாணிக்கமே... ஏழேழு உலகமும் இந்த மழலை மனம்  மாறாத சிறு பிள்ளைநிலவை தாலாட்டி சீராட்டி  கொஞ்சிடுமே..!

விடியாத இரவுகள்

படம்
விடியாத இரவுகள்  முடியாத பயணங்கள் துணையாக உலா வரும் காதலின் கனவிவள்.. துணையேது, அறிந்திட நினைக்கும்  நிமிடங்களில் வாய்மொழியாய்  பேசிடும் குயிலிவள்... இந்த இரவுதான்  கழியுதோ - இல்லை  கனா தொலையுதோ, என்று உணரும் நேரமே உயிரின் உரமிவள்.. சொல்லிலே,  கிடைக்காத கீர்த்தியும் பாவனையில்  மறைத்திடுகிறாள், சிந்தனையை  சிதைத்திடுகிறாள், மெழுகு உருகி  கரைவது பேலே கன்னி மனம் கரைத்துடுகிறாள்... பொழுது விடியும் வரை விழிகள் தாண்டி  சிந்திக்கவிடாத சிறைக் கொண்டவளாய் கவந்திழுக்கிறாள்,  இரவின் மடியில்.... மயங்கடிக்கிறாள்...