இடுகைகள்

மார்ச், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நினைவு புத்தகம்

படம்
எந்த மலர்க்கும் `  பிறந்த முகவரி  கிடையாது...!  பிறகு நீ மட்டும் எப்படி  முகவரியுடன் கையழுத்து இட்டாய்  என் நினைவு புத்தகத்தில்..........!

போதிமரம்

படம்
நினைவுகள் அனைத்தும்  காதலின் நிஜங்கள்...!  நிம்மதி என்பது  காதலின் ஜென்மங்கள்...!  நிலைகள் ஏழும்  காதலின் வாசற்படிகள்...!  நீயும் நானும்  காதலின் உறவுகள்...!  நம் இதயங்கள் இரண்டும்  காதலின் உணர்வுகள்...  திருமணம் என்னும் பந்தத்தில் கூட  காதல் தானே போதிமரம்...........!

என் அன்பே

படம்
பொய் சொல்லி உன்னை நான் ரசிக்கவில்லை உன்னை விட்டு தூரம் செல்ல நினைக்கவில்லை என் மனம் ஏனோ உன்னை தினம் நினைக்குதடி மழைக்காத உன்னையே சுத்துதடி....! வெள்ளி முளைச்ச என் வானமே வெற்றிடமாய் போனதடி என் மனசு...! துள்ளி குதிச்ச வெண்ணிலவே - இப்போ நீ இருக்கும் திசை தேடுதடி என் மனசு...! திரையிசை படிக்க வந்த திரவியமே என் திரைக்கடல் வற்றியதடி நினைவாலே...! சொல்லிதர ஆளில்லா ஆணையமே சட்டம் இயற்றி சிறைபடுத்துதடி உன் நினைவு...! நான் நினைக்கும் போதெல்லாம் கனவில் வந்தவளே...! ரசிக்க நினைக்கையில் கனவையே களைத்தவளே...! காயம் கண்டதடி என் இதயம் - அதில் காணாமல் போனதடி உன் உருவம்...! கலங்கி விட்டேனடி உன் அன்பில் - அதை கிள்ளி போனதடி உன் கோபம்...! காலம் தால்தாதடி என் அன்பே...! தினம் ஏங்குதடி . என் அன்பே...!

பாதி நிலவு

படம்
அமைதி நிறைந்த இரவு நேரம்..... செவிகளில் இசை கேட்டபடி உலா வந்துகொண்டிருந்தேன் என் வீட்டு மொட்டைமாடியில் அன்னாந்து பார்கையில் தான் தெரிந்தது நிலவில் பாதி களவு போய்ருப்பதை எங்கே என்று தேடினால் என் மனம் என்னும் மாளிகையில் மறைந்து கொண்டது என்னவளின் முகபிம்பமாய்...!

உணர்வுகள்

படம்
மென்மையான குரல்  இனிமையான சிணுங்கள்  சுவைக்க சுவைக்க பேச்சு  அன்பான வேண்டல்  கண்டவுடன் ஆர்பரிக்கும்  விழிகளின் எண்ணங்கள்.....  கட்டிதவுளும் அவளின்  பாச உணர்வுகள்......  காந்தமாய் கவரும்  அவளின் காதல் உணர்சிகள்....  இவைகளினால் நான் அவளை  பிரேமிக்கிறேன் என் நினைவலைகளால்,,,,,,,,,,,,,

அம்மா..........

படம்
என்னை வளர்க்க  நீ ஆயிரம் கஷ்ட துன்பங்களை  அடைந்திருப்பாய்....  உனக்காக நான் செய்யும்  ஒரே நன்றிகடன்  உன் இறுதி நாள் சந்தோசத்தை  நிறைவேற்றும் மகனாக  இருப்பது மட்டுமல்ல  உன்னை சுமப்பதும் நானாக இருக்க வேண்டும்........

வெண்ணிலவு

படம்
வெள்ளி சாரிகையில் புடவை உடுத்திய வெண்ணிலவே தங்க சிலைபோல் நின்றிருக்கும் பதுமையே...! அகத்தின் அழகை முகத்தில் காட்டிக்கொடுக்கும் உன் முகப்பொழிவில் சிக்கிக்கொண்டது என் மூச்சுக்காற்று...! 

காவியம்

படம்
மூக்கு கண்ணாடி போட்டு வந்த ரோஜா மலர் நீ...! ரோஜா இதழில் தேன் பருக வந்த தேனீ நான்...! மலரும் பூவாய் உன் புன்னகை - அதில் மெல்லிசை கவி பாடும் தென்றலாய்  உன் மௌனம்...! உன்னிரு செவிகளில் இசைபாடும் சங்கிதமாய் உந்தன் மடல் தொட்டு தொங்கும் தொங்கலின் சிறப்பு உன் அழகு...! விரல் நுனியில் தடவிருக்கும் அந்த சாயம் கூட சாட்சி சொல்லும் - உன்னில் நான் சிறைப்பட்டிருப்பதை...! உன் உதட்டு சாயம் கூட சுவை தரும் உன் உதட்டில் உள்ள புன்னகையின் பரிசத்தில்...! கனவெல்லாம் நீதானே என் நினைவெல்லாம் உன்னுயிர் தானே...! உன்னை காணாத ஒரு நொடி கூட எந்தன் உயிரின் வலி தெரிகிறதே...! என்னோடு நீ இருந்தால் உயிரோடு நானிருப்பேன் - கண்ணே கனவோடு நீ இருந்தால் உந்தன் நினைவோடு தானிருப்பேன்....! உன்னை பார்த்துகொண்டிருக்கும் போதெல்லாம் உன்னோடு பேச நினைத்த வார்த்தைகள் கூட மௌனமாகிறது உன் அமைதியான அகம் கண்டு...! என் கவிக்கு அழகு சேர்க்கும் உன் முகப்பொழிவில் விண்மீன்கள் இரண்டும் சிறை கொள்கிறது என்னை...! கவியே கவிமணியே - என் காவியத்தின் முதல் வரியே...! பனியே பனியமுதே  என் அங்கத்தின் பணி பத

குரல்

படம்
உன் குரல்  தென்றலை விட  சுகமானதாய்  இசையை விட  இனிமையானதாய்  பனியை விட  குளிரானதாய்  என்னுள் ஊடுருவும்  அந்த ஓர் நிமிடம்  என் மனதையே அள்ளி சென்று விட்டதடி.....

அழகு

படம்
அடியே...! என் மனதை கொள்ளை கொண்டவளே... உன் இமைகளின் துடிப்பு, காதோரம் ஆடும் ஜிமிக்கி, ஆரஞ்சு பழச்சுளை போன்ற உன்னிரு இதழ்கள், வெள்ளை நிலாவிற்குள் கருப்பு பழிங்குகல் போன்ற கண்கள், கருமை நிறைந்த அடர்த்தியும் நீளமும் உடைய  கூந்தழ், கொஞ்சமும் சத்தம் கேட்காத புன்னகை, வஞ்சம் இல்ல அழகு, பார்த்தவுடன் ஆர்பரிக்கும் உள்ளம், என் மனச தொலைத்தாயடி.....! அடியே.....! அடியே....! உன் வழிகளின் பார்வையில் மயங்காத ஆண்கள் இல்லையடி, கண்களில் கொண்ட கவர்ச்சியும் உடம்பில் கொண்ட காம உணர்ச்சியும் உன்னை கண்டதும்  என் மனதை ஆர்பரித்து விட்டது  அழகே........! மொத்தத்தில் நீ செதுக்கி வைத்த செப்பு சிலையடி .............!

நியாபகம்

படம்
நான் முகம் பார்க்கும் கண்ணாடி பிம்பத்தில் கூட உன் அழகை வட்டம் போட்டு காட்டுகிறது நீ மங்காத மங்கை என்று...........! மணி இடை போன்ற உன் கொடி  இடை எந்தன் மனதை இடைவிடாமல் மயங்கடிகுதடி..................! வஞ்சம் இல்லா உன் புன்னகையும் கார்மேகம் போல் உன் கூந்தலும் என் மனக்கதவை தட்டுதடி........அன்பே..!

முத்தம்

படம்
முள்ளில்லா ரோஜாப்பு இதழ்களால்  என் பட்டுமேனி கன்னத்தில்  தழுவிய இசை முத்தம்..................!

ஆண்களின் காதல்

படம்
காதல் உன்னுள் வரும் வரை நீயாக இருப்பாய்... உன்னுள் நுழைந்ததும் தீயாக மாறுவாய்... கணக்கு வழக்குயில்லாமல் கவிதைகள் புனைவாய் இலக்கணம் இலக்கியம் பயிலாமல் இதிகாசங்கள் படைப்பாய்...! தேர்வினில் கூட இலக்கணப்பிழை இருக்கும் உன் கவிதைகளில் இருக்காது.....! உன்னையே அறியாமல் உனக்குள்ளே ஒரு ஒளிர்வட்டம் தோன்றும்... அது உந்தன் எதிர்கால வட்டமாகும்...! அவளின் புன்னகையில்  மாட்டி தவிக்கும் உணர்வில்லா விட்டில் பூச்சி நீ.......! அவளிடம் சோர்வின்றி பேசுவாய் அவளின் வாக்கு உனக்கு மெய்யாக தோன்றும் அவளின் குரல் குயிலின் குரலை விட இனிமையாக தோன்றும்...........! மங்கையரின் காதல்  மங்காத விளக்குகள்....... அதில் சுடர் விட்டு எறியும் தீபம் ஆண்களின் காதல்.....

உன்னை நாடி

உன்னை தேடியே உண்ணாமல் உறங்காமல் உனக்காக காத்திருக்கிறேன் நீ கண்டும் காணமல் உன் கண்களை சிமிட்டியெ என் காதலை சுக்குநூறாக சிதைதுவிட்டாய்......! என்னை அறியாமலே உன்னை நாடியே வந்தேனே வந்தேனே அன்பே...................................!

அன்னை

படம்
ஈரைந்து மாதங்கள் என்னை சுமந்து அன்பில் குறையாத பாசத்தையும் அளவில் குறையாத சத்துகளையும் குருதியோடு கலந்து பாலாக்கி எனக்கு ஊட்டி வளர்த்தவளே...! என் அன்னையே....! தெய்வங்களில் சிறந்தவள் யாரென்றால் அது உன்னை தவிர வேறெவளும் இல்லை இவ்வுலகில்......!

புன்னகை

படம்
கருவிழியை காத்திடும் இமையாய்..... மலர்களை காத்திடும் மலர்விழியாய்....  உன் முகத்தில் ஒளிர்ந்திருக்கும் புன்னகையாய்...... உள்ளதினிலே பொலிவு உண்டாகி  மனங்கள் இசை பாடட்டும்  என்றென்றும் சங்கிதமாய்...........

அவள் அன்பு

படம்
உணர்வுகள் பல உருவாகலாம்  ஆனால், உள்ளத்தில் ஏற்படும்  வலியின் உணர்வு  அவள் அன்பின்  அடையாலம்...

என் கள்வன்

உடல் சிலிர்த்து விடும் தென்றல் காற்றில்.... மெல்லிய புன்னகை பூக்களில்... என்னை விடாது தொடரும்   உன் வியர்வை வாசமும் கூட   என்னை உன் மனம் நேசிக்க வைக்கிறது கள்வாஆஅ....!                                           ---- உந்தன்  கவி

அவளின் ஏக்கம்

அந்தி பொழுதில் ஆகச வானில் எந்தையும் என் மனதையும் திருட....! கணநேரமும் கவியமுதை உட்கொண்டபடியே என்னை தொடரும் உந்தன் நினைவுகள்.....! நீயே, என் அன்பின் உணர்வையும் யான் உன் மீது கொட்ட காதலின் பரிசத்தையும் என் விழிகள் இடைவிடாது  -  உன்   வரவையே எதிர்நோக்கிறது என்றுனர்வாயோ...! காதலின் மதி மயக்கத்தில் கள்வா உந்தன் பாதம் பணிந்தேன்...! உள்ளுணர்வில் மகுடம் சூட்டிய மன்னவா எந்தன் மனதை கொள்ளை கொண்ட என்னவா...! துள்ளி துள்ளி திரிந்த என் மனதை துவண்டு போக செய்ததுடா உன் பிம்பம்...! தூரிகையில்  வரைந்த உன் உருவத்தை தேடி அலையுதடா என் கண்கள்...! கண்டேன் கண்டேன் கனவில் கண்டேன் காலம் கடந்தும் நேசித்த உன்னை....! ஏங்கி ஏங்கி தினமும் செத்தேன் உனை நேரில் காணும் தினத்தை எண்ணி...!

♥அவள் நினைவுகள்♥

பொய் சொல்லி உன்னை நான் நேசிக்கவில்லை உன்னை விட்டு தூரம் செல்ல நினைக்கவில்லை என் மனம் ஏனோ உன்னை தினம் நினைக்குதடி மழக்காத்தா உன்னையே சுத்துதடி...! வெள்ளி முளைச்ச என் வானமே வெற்றிடமாய் போனதடி என் மனசு...! துள்ளி குதிச்ச வெண்ணிலவே - இப்போ நீ இருக்கும் திசை தேடுதடி என் மனசு...! திரையிசை படைக்க வந்த திரவியமே என் மனக்கடலை வற்ற வைத்ததடி உன் நினைவு...! சொல்லி தர ஆளில்லா ஆணையமே சட்டமேற்றி சிறை படுத்துதடி உன் நினைவு...! நான் நினைக்கும் போதெல்லாம் கனவில் வந்தவளே...! ரசிக்க நினைக்கையில் கனவையே களைத்தவளே...! காயம் கண்டதடி என் இதயம் அதில் காணாமல் போனதடி உன் உருவம்...! கலங்கி விட்டேன் நீ கொண்ட கோபத்தில் அதை கிள்ளி சென்றுவிட்டாய் நீயே...! காலம் தாழ்தாதடி என் அன்பே...! தினம் தினம் ஏங்குதடி என் அன்பே...!

யுத்தம்

நித்தமும் உன் நினைவாளே  எந்தன் மனம் எனும் கோட்டையில்  யுத்தம் செய்வதே நீ என்றால்  எந்தன் மொத்த ஐீவனும்  உன் ஒருத்திக்கு அடிபணியும்....! தினம் தினம் காதல் யுத்தம்....!

காதல்

கவிதை எழுத நான் கவிஞன் அல்ல....! உன்னை பற்றி காவியம் பாட நான் பாடகன் அல்ல.....! உன்னை ஓவியதில் தீட்ட நான் ஓவியனும் அல்ல.....! உன்னுடைய காதலன்........... நான் காகிதத்தில் கிறுக்கியது கவிதையாக உன் கண்களுக்கு தெரியவில்லை என்றாலும் நான் உன் மீது கொண்ட காதலின் ஆழம் தெரிந்தாலே போதும் என் குறல் இனிமை இல்லை என்றாலும் என் இதயதில் இருப்பவள் நீ தான் என்று நீ உணர்ந்தாலே போதும் நான் வரைந்த ஓவியம் உன்னை போல் இல்லாமல் இருக்கலாம் ஆனால் என்னுள் இருந்து என்னை இயக்குபவள் நீதனடி.............

இதழ்

படம்
மனைவியின் நொடிவிட  புன்னகையின் ஆனந்தத்தில் இடைவிடா பணியில் ஆனந்தமாய் இசை போடும் தென்றல் கணவனின் செவ்விதழ் இதழ்கள்.................