என் தோழி

என் உணர்வில் பிறந்த 
புது வசந்தமே..
புன்னகை பூத்திடும் 
பூக்களின் அரசியே...
உன் உறவும் உயிரும் 
எனக்கான ஒன்று..
உன்னை நித்தமும் நேசிப்பேன்
தினமும் சுவாசிப்பேன்..
கடந்த கால நினைவெல்லாம் 
கனவாய் போகட்டும்
நிகழ்கால வசந்தமாய் - நம்
நட்பு மட்டுமே மலரட்டும்..
உன்னை விட 
சொந்தம் ஏதும் எனக்கில்லை
நட்பின் மூச்சு காற்றாய்
நாமே சுதந்திரமாய் பறந்திடுவோம்
என்னாளுமே...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அழகு

ஆண்களின் காதல்

காத்திருக்கிறேன்