காத்திரு..!

விடை மட்டுமே தெரிந்த
விசித்திர பதுமை நான்..
பால் சுரக்கும் பசுவும்
சினம் கொள்ளும் என தெரிந்தவள் நான்..
ஏனோ அறிய மறந்தேன்
மானுட பிறவிகள் நம்மை 
ஆட்கொள்ளும் - அதில் 
புழுவாய் சிக்கி சிதைவோம் என..
எத்தனை எத்தனை துன்பங்கள்
துயர் துடைக்கும் கரங்களும் 
சூழ்நிலை கைதியாய் சிக்குண்டுள்ளதே..
கலங்காதே என் நெஞ்சமே
காத்திருப்போம்..! காலம் வரும்..!
எனக்கான விடியல்
விருச்சம் பெரும்..
கவி சக்கரவர்த்தியாய்..!
காலை கதிரவனாய்..!
ஒரு நாள் விடிந்தே தீரும்..!
காத்திருப்போம்..! கவியின் கரங்களோடு..!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அழகு

ஆண்களின் காதல்

காத்திருக்கிறேன்