எந்தன் காதல் உயிரே

கவியின் காதலியே 
மீனம்மா..! மீனம்மா..!
தீராத காதல் தீயே 
என் செல்லம்மா..!செல்லம்மா..!

உன் நினைவில் மயங்கி விழுந்து என் மனதை தொலைக்கிறேன்..!
என் கனவில் உன்னை கண்டு எந்தன் சோகம் தொலைக்கிறேன்..!

மீனம்மா மீனம்மா 
என் உயிரின் கைபிடி நீயம்மா 
கண்களின் ஓரம் கசியும் 
கண்ணீர் துளியும்..!
உன் விரல் பிடித்து நடக்க என் உணர்வும் துடிக்கிறது..!

அந்தி மாலைப்பொழுதில் மலைச்சாரல் வீசுகையில் 
மனம் என்னவோ 
மீனம்மா..! மீனம்மா..! 
என்றே கதறுகிறது

கதறும் மனமும் 
கரையும் குணமும் 
உன்னில் பிறந்து 
என்னில் முடிகிறது..! 

காதல் என்னும் கரும்பு தின்ன 
என் மனம் ஏங்கித் தவிக்கிறது..!
மீனம்மா - என் உணர்வின் 
விழிம்பில் நீயும் உயிரை பறிக்கிறாய்..!

உன் மடியில் பிறந்து தவழும் சிறுபிள்ளையாய் உன் மேல் நான் கட்டித்தழுவ ஆசை கொண்டேன்..!

எட்டிப் பிடித்து நிலவையும் உன் காலடியில் கிடத்துவேன்..!
வானவில்லையும் கொண்டு வந்து வர்ண சேலையாய் சார்த்திடுவேன்..!
மின்னலைப் பிடித்து 
மின்மினிப் பூச்சியாய் விளையாட 
உன் கையில் தந்திடுவேன்..!

சோகம் மறந்து நடக்க 
சோலைவனக் கிளியை பாடச்செய்திடுவேன்..!
பருவமடைந்த மங்கையாய் 
உன்னை மலரச் செய்திடுவேன்..!
மீண்டும் உன்னில் பிறந்து
உன்னில் மடிய 
ஆசை கொண்டிருப்பேன்..!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அழகு

ஆண்களின் காதல்

காத்திருக்கிறேன்