இடுகைகள்

2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நீயும் நானும்

உன்னை தினம் வேண்டியே தியானம் ஒன்று இருக்கிறேன்...! நினைவொன்றில் நீ மட்டும் நிமிடம் தவராமல் இருக்க வேண்டுகிறேன்...! நீ இலைபாற வேண்டியே உன்னை தினம் நினைக்கிறேன்...! என் வாழ்க்கையில் வெளிச்சம் தர வேண்டியே உன் வரவை எதிர் நோக்கிறேன்...! நீ மட்டும் தான் எந்தன் உலகம் என்கிறேன் இந்த உலகில் நீயும் நானும் மட்டும் இருத்தல் வேண்டுகிறேன்...!

காலாவதி

கனவிலும் நினைக்காத சூழ்நிலை இனியென்றும் நினைவில் நீங்காத வேள்நிலை வேடிக்கையாய் இருந்துவிட்டோம்...! வேதனைகளை தந்துவிட்டாய்...! வேர்வை துளிகளை விதைத்து விதையின் விருட்சமாய் வளர்ந்து நின்றோம்...! மழைத்துளிகளின் வேகத்தில் எங்கள் ஆணிவேரையும் இழந்து கண்ணீர் கடலில் மிதந்தோம்...! பலகரங்கள் எங்களின் துயர்துடைக்க கைக்கொடுத்தன, அதற்க்கும் பல தடைகள்...! போரடியே வாழ்ந்த எம்மக்கள் தங்கள் உரிமைக்கும், பசிக்கும் போராடவேண்டிய நிலையில்...! காலம் தான் பதில் சொல்லும் என்றால் எங்களின் வாழ்க்கையில் காலமும் காலாவதி ஆகிவிடும் போல்...!

ஓர் கருவின் மிச்சம் அவள்...!

சில நிமிட பார்வையில் பலநூறு மாற்றங்கள்...! பாவை அவள் மத்தியில் புதைகின்ற நிமிடங்கள்...! தோள் உரசி பழகாத காதலில் உயிர் உரச நேரமிருந்தது சமயம் இனம் மறந்து...! எச்சம் இட்ட மனிதர்கள் மத்தியில் மிச்சமாய் ஒரு சொட்டு...! சிலரின் தேடல் இங்கு பலரின் விடியலாய்......! சிலரின் விடியல் பலரின் தேடலின் அவளமாய்...! ஆண்மையின் புரிதல் பெண்மையின் மகத்துவத்தில்....! பெண்மையின் புரிதல் ஆண்மையின் அரவனைப்பில்...! இங்கு இறுதியில் மீண்டும் உதயமாகும் ஓர் கருவின் மிச்சம் (பெண்மை)அவள்...!

தொடர் கதை

உன்னை காணுமுன் களவாடி போன என் பொழுதுகள்...! உன்னை கண்ட நாள் முதல் கரைந்து போனதடி உன்னில் என்னை..! காதலித்தேன் ஒருதலையாக அன்று காதலிக்க படுகிறேன் இருதலையும் நீயாக இன்று...! காலம் என்னும் பெருவெள்ளத்தில் காதலித்து நீந்தூவோம் கரையை நோக்கி அல்ல...! காதலின் ஆழத்தை நோக்கி..! உன்னை காணும் வரை காதலை கூட நான் ரசித்தது இல்லை...! உன்னை காதலித்த பின் கனவையும் அதன் சுவை மாறாமல் சுவைக்கிறேன்...! காரணம் நதி ( நந்தினி ) யில் பூத்த மலர் என் கனாவிலும் பூக்க தொடங்கியதால்...! காதல் உலகம் அறிய ஆசைப்பட்டேன் உன்னை கண்ட நொடியில் தான் ஓர் ஜென்மத்தின் காதலை கண்டுகொண்டேன்..! உன் இடைமுகப்பில் சொருகி வைத்த முந்தானையும் சிறிதும் இடைவெளி இல்லாமல் இருக்க அனைத்துக் கொண்டதடி உன்னில் என்னை...! கல்வி மட்டுமே கற்பிக்க தெரிந்த விழிகள் எனக்கு காதல் கலையையும் கற்பிக்கின்றன உன் சிறு கண் சிமிட்டலில்...! கவிஞனுக்கு காதல் பற்றி கனா பாட தெரியும் கண்ணியவல் கண்களை பற்றிப் பாடியது இந்த நொடியில் தான்...! காலப் பெருவெளியில் அண்டம் சூழ்ந்த இருளில் மணி ஒன்றை தொடும் வேளையில் மணாளன் மணாளியின் மேல் கொண்ட க

கலப்பை

படம்
கல்வி கற்க கோடி கோடி பணம் கேட்கும் கற்சிலை வேந்தர்களே.... பாருமையா எங்களின் நிலமையை.... வியர்வை சிந்தி ஓயாமல் உழைத்த எம் மக்களை ஓட ஓட விரட்டுதையா இச்சமுக பெரிச்சாலிகள்.... விவசாயிக்கு மகனாகவோ அ மகளாகவோ பிறந்ததற்க்கு நாங்கள் ஏம்மய்யா கவலை படவேண்டும் இன்னும் சில ஆண்டுகளில் உலகமே கவலை படம்.... கணியை தூக்கியே பலக்கப்பட்ட கைகள் 〽கலப்பபையை 〽தூக்க களம் இறங்கிவரும் காலம் கைவசப்படும்....😍😍😍😍😍 விவசாயத்தை காப்போம்... ! மனித்துவத்தை மதிப்போம்...!

உனக்காகவே...!

படம்
எனது நெஞ்சுக்குள் நரம்புகளுடன் பின்னி பிணைந்து சந்தைகளின் நரம்பியல் மாற்றத்தை தன வசம் கொண்ட என் குருதி பிழம்பே...! உந்தன் உயிரில் தானடி நான் வாழ்கிறேன் ..! ஒரு நிமிடம் - நீ மறைந்தாலும்  எந்தன் ஜீவன் உன் காலடியில் காற்றாக மறைந்து போகுமடி எனது அன்பு காவியமே...! அனல் கொண்ட என் மார்புக்குள் மாசற்ற மாணிக்கமாய் புதைந்திருக்கும் புவிமலரே...! நீ என்னவளாக மலர போகும் நாட்களை எண்ணியே எந்தன் பொழுதை கழிக்கிறேன்...! கனவிலும் உந்தன் வரவை எதிர்நோக்கும் கவியழகு மா.........

என்னவள்

உன்னை மட்டுமே காண துடிக்கும் என் விழிகளுடன் ஒரு பயணம் நடு வானில் நிலவொளியில் உன் அழகின் ரகசியத்தை காண சென்றேன்..! நான் கண்ட அழகியை பிரம்மணும் பார்த்து இவ்வளவு அழகா என்று அசந்துவிட்டான்....! அழகியே.....! என் கவிதையின் மொழியே..! மருகணமே... மலைத்துவிட்டேன் மாலையிடும் என் மனைவியே...!

அவளின் இன்ப அதிகாரம்

பெண்ணின் மனதை தொட்ட நிமிடத்தில் நிலை தடுமாறிய என் நினைவுகள்.....! அவள் வெளிரிட்ட உமிழ்நீர் முத்ததில் நனைந்து தெவிட்டாத இன்ப அமிழத்தை இதழ் பட பருகி ஆனந்த கூத்தாடுகிறது....!

காத்திருக்கிறேன்

படம்
மொழியற்ற சுவாசகாற்றே...! உன் வாய்மொழியறிய விரும்புகிறேன் எனக்காக பிறந்த தென்றலே...! உன்னை மட்டுமே தினம் சுவாசிக்கின்றேன் இரவின் தனிமையை போக்க நிலவாக வந்த என் பௌர்ணமியே, உன் முகம் காண துடிக்கிறேன் முழுமதியே, உன் அகம் இறங்கி வா..! உன் ஒற்றை வினாடி புன்னகைக்காக காத்திருக்கிறேன்....!