இடுகைகள்

இரயில் பாதை

படம்
 இரயில் பயணத்தில் அடுத்த நிறுத்தம் தேடி  அலையும் பயணியை போல  உன் முகவரி  தேடி அலைகிறேன்.. உனக்கான என்  முகவரி  என் நிழலாகி போனதை போல்... என் வாழ்க்கை பயணத்தின்  ஒரு பகுதி உனதாகி போகிறது... நீண்ட இப்பிரபஞ்சத்தில் நமக்கான தேடலும் நீண்டுக்கொண்டே தான்  போகிறது... இரயில் தண்டவாளங்களை போல... இடைவெளியும் குறையவில்லை ஒன்றோடு ஒன்று ஒட்டவுமில்லை நாட்கள் மட்டும்  கடந்து கொண்டே போகிறது... மனங்கள் மட்டும்  தவித்து தவித்து அடங்கி போகிறது.. சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல்.... ✍️அமரகவி

கடந்துவிட முடியாது

படம்
  இருவிரல் இணைப்பில் இறுதியாய் கடந்த பாதை தோல் உரசாத கனத்தில்  விழிகள் உரசி ஊடுருவிய மின்சாரம்... தொட்டால் பளீச் என வெட்டும் மின்வெட்டை போல உடல் தொட்டு நடுங்கியது... அவளின் நீளக்கருங் கூந்தல் காற்றோடு அசைந்து என் முகம் தழுவ தென்றலோடு கரைந்து போனேன்.. விளையாட்டாய் வம்பிலுக்க வேண்டும் என்றே வந்தாள் தன் இடையை வளைத்து என் மனதை மயக்கி... யாரும் கண்டுக்கொள்ளாத நிமிடத்தில் கண்ணத்தில் பச்சை குத்தினால் தன் இதழ் ஊசியால்... அவள் விரல் ரேகையெல்லாம் இதழ் ரேகையாக பதிந்துவிட்டது  கண்ணக்குழி இடுக்கில்... கால் போன போக்கிலே மனங்களும் போனது.. ஒன்றை ஒன்று பின் தள்ளி... அவள் ஓர விழிகளில் என் வார்த்தை  மௌனமாகி போனது... சந்தோசமான நாட்களுக்கு  மத்தியில்  சில நித்திரை கனவுகளும் என் வீட்டு கதவை  தட்ட தான் செய்கின்றன... காலத்தின் சுழற்சியில் வாழ்க்கை பாதையில் மாரி  கொட்டியும்  தீர்க்கிறது... கானல் நீராய் கண் கட்டியும் நீர்க்கிறது...  அவளுடனான நினைவு பாதைகளை கால் கொண்டு மட்டும்  கடந்து விட முடிவதில்லை... ✍️அமரகவி

கடைசி வரி

படம்
 ஒரு வேளை நான் மரணமடைந்துவிட்டால் என்னால் எழுதிய  எழுத்துகளை அழித்துவிடாதீர்கள் அவை அனைத்தும் நான் என் சுயநினைவோடு உங்களுக்காக  உங்கள் நினைவுகளோடு தேடி சேகரித்த வார்த்தைகள் சேதபடுத்திவிடாதீர்கள் பிற்காலத்தில் யாரோ யாருக்கோ எழுத போகின்ற  சிறு நினைவுகளில் என் எழுத்துகளும் இருந்துவிட்டு போகட்டும்... உங்கள் அழைப்பேசியில் என் தொலைப்பேசி எண் சேமிப்பில் இருக்கும் தொல்லை என்று  தொலைத்துவிடாதீர்கள் உங்கள் மனதில்  இல்லாத என் பெயர் உங்கள் தொ(ல்)லைப்பேசிலாவது இருந்துவிட்டு போகட்டும்.. என் நினைவை அழிக்க  சிரம படாதீர்கள் வாய்விட்டு ஒருமுறை  கத்திவிட்டு சொல்லுங்கள் உங்கள் இதயத்தில் இல்லை உங்கள் நினைவில் கூட வரமாட்டேன்.. ஒளிக்கோப்பாய் பிற்கால  நியாபகத்திற்காக எடுக்கப்பட்ட  புகைப்படங்களை  அழித்துவிடாதீர்கள் ஒரு நாள் நினைவு வரலாம் இவன் நம் நண்பன் என்று அன்று அனைத்தையும்  குழி தோண்டி புதைத்து விடுங்கள் நான் இறந்து சாம்பலான பின்.. என்ன இருந்து  என்ன புண்ணியம் நிகழ்காலத்தில்  நிம்மதி இல்லையென்றால் நித்திரையிலே உன் மத்திரையிலே நான் சடலமாக  வாழ விரும்பாத இதயத்தின்  வேண்டுகோள்... நிறைவேற்றிவிடுங்கள் ஆயிரம் ஆச

காதலின் நிறம் கற்பனை..!

படம்
கனவு எனும் பெரும் உலகில் நான் கண்ட முதல் நாவல் அவள் முகம் எனும்  வண்ணக் கதிர், வாய்விட்டு வாசிக்க  வாய்ப்பை தேடி நித்தமும் மறைந்தே நின்றேன் அவள் பாதியில் விட்டுச்சென்ற  வெள்ளை புள்ளிகளின் ஓரத்தில்..! எத்தனை அதிசயம் வீட்டு வாசலில் அவள் கொட்டிவிட்டுச் சென்ற சுண்ணாம்பிலும் சித்திரமாய் காதல் பேசுதே..! ஹோ... இது தான்  யாருக்கும் கிடைக்காத  நாவிற்கினிய அவ்வையின் நெல்லியோ..! என்ன சொல்வது  என்னவளின் புன்னகை  காட்டும் ஓவியத்தின் வர்ணங்களை..! நான் மட்டுமே கண்டேன் அவளுடனான தனிமையின் பரிசத்தில் வண்ணங்கள் நிறைந்த அவளிடம் - நான் கண்டது நிறத்தை அல்ல பசுமை மாறா குணத்தின் இயல்புகளை..! ஆமாம்,  உலகில் வர்ணங்களே அதிகம் கண்ணுக்கு விருந்தாகின்றன, ஆனால் எனக்கு மட்டும் என்னவளே கவித்துவம் நிறைந்த மோனலிசாவின் ஓவியமாகிறாளே..! இதற்கு இயற்கையும் பெரும் சாட்சி சூரியனும் புறஊதா கதிர்களை  அகம் கொள்கிறது, சந்திரனும் இருளுக்குள் ஓடி மறைகிறது, வானவில்லும் ஏழு வழி சாலையாகிறது வர்ணங்களுக்கே வண்ணம் சேர்த்தவள் வீதியில் பவனி வரும் அழகில்..! என்ன செய்வது வண்ணங்களுக்கு நிறமானவள், என் எண்ணங்களுக்கு உரமானவள்..! ஒரு கணமேனும் கண்

நீ மறைக்கும் புன்னகையில்

படம்
வழிந்தோடும் நதியில்  மறைந்திருக்கும் பூ மகளே.. உன்னை கடக்கும் நேரமெல்லாம் நதியும் சற்றே  நின்று தான் போகிறது... ஒரு நொடி பொழுதேனும்  கண்டுவிட மாட்டோமா என்று நீ மறைக்கும் புன்னகையை... யாருக்கு தெரியும்..? நீ மறைப்பது உன் புன்னகையில்  என்னை தவிர  வேராரும் விழுந்துவிட  கூடாதென்பதற்கென்று..!

நீயும் நானும்

படம்
நீண்ட நீண்ட காலம்  நீயும் நானும் மட்டும்  நீந்தி போவோம்... நீரின் ஆழத்தை கடந்து, விரல் பிரியா இருக்கத்தில் உன்னை பிரியா நானாக என்னை பிரியா நீயாக காலம் கடந்தும்  பயணிப்போம் காலத்தின் ஓடத்தில்...

🔥சரணஜோதி🔥

படம்
வீசுகின்ற தென்றலில்  பூக்கின்ற மலர்களை போல் தூவுகின்ற மழைத்துளியில் விழுகின்ற முத்துகளை போல் புன்னகைகின்ற மதியின் பிராகாசிகின்ற பௌர்ணமியை போல் கொள்ளை கொள்ளும்  முத்துச்சிற்பி பவளவாய் செஞ்சுடரே... என் மனதை  மின்னல் போல் உள்ள  உந்தன் கருவிழி அம்புகள் தாக்குகின்றன... சற்றே ஒரு நொடி  கண்களை திசைமாற்று உயிர்பித்துக் கொள்கிறேன் உன் மேல் நான் கொண்ட  மோகத்தின் காதலை... கனவுகளில் கசிந்திடும்  கண்ணீர் துளிகளும்  சரணம் அடைகிறது ஜோதியின் பாதச்சுவடுகளில்... எந்தன் உள்ளம்  இத்தனை நாள் தேடியது  உன்னை போன்ற  ஓர் வெண்ணிற அரசிலங்குமரியை தானோ என்னவோ.. திசைகள் எட்டும் முட்டினாலும் மனம் என்னவோ வடக்கே தான் பாய்கிறது.. காத்திருப்பதும் ஓர் சுகமே காதலை விட காந்தம் போல் நம் நட்பு  ஆயிரம் ஆண்டுகள் கடந்தும்  தொடரும் என்ற ஓர் நம்பிக்கையின் விழிம்பில்  கவிஞன்...???