உயிர்

கடல் மேல் விழுந்த
பனித்துளி போல்
நம் உறவு இருக்க....!
நீ கானல்நீர் போல்
கரைந்து போனாலும்
அதன் கூடவே
என் உயிர் நீரும் சேர்ந்து போகுமடா...!

என் சுவாச காற்றில் கலந்த - நீ
மணல் காற்றாய் பிரிந்தாலும்
உன் புன்னகை என்னும்
ஒரு துளி வியர்வை போதுமடா
என் ஆயுள்வரை நீடிக்கும் உயிர்த்துளியாய்....!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அழகு

ஆண்களின் காதல்

காத்திருக்கிறேன்