ஓர் கருவின் மிச்சம் அவள்...!
சில நிமிட பார்வையில்
பலநூறு மாற்றங்கள்...!
பாவை அவள் மத்தியில்
புதைகின்ற நிமிடங்கள்...!
தோள் உரசி பழகாத காதலில்
உயிர் உரச நேரமிருந்தது
சமயம் இனம் மறந்து...!
எச்சம் இட்ட மனிதர்கள் மத்தியில்
மிச்சமாய் ஒரு சொட்டு...!
சிலரின் தேடல் இங்கு
பலரின் விடியலாய்......!
சிலரின் விடியல்
பலரின் தேடலின் அவளமாய்...!
ஆண்மையின் புரிதல்
பெண்மையின் மகத்துவத்தில்....!
பெண்மையின் புரிதல்
ஆண்மையின் அரவனைப்பில்...!
இங்கு இறுதியில்
மீண்டும் உதயமாகும்
ஓர் கருவின் மிச்சம் (பெண்மை)அவள்...!
கருத்துகள்