காலாவதி

கனவிலும் நினைக்காத சூழ்நிலை
இனியென்றும்
நினைவில் நீங்காத வேள்நிலை
வேடிக்கையாய் இருந்துவிட்டோம்...!
வேதனைகளை தந்துவிட்டாய்...!
வேர்வை துளிகளை விதைத்து
விதையின் விருட்சமாய் வளர்ந்து நின்றோம்...!
மழைத்துளிகளின் வேகத்தில்
எங்கள் ஆணிவேரையும் இழந்து
கண்ணீர் கடலில் மிதந்தோம்...!
பலகரங்கள் எங்களின் துயர்துடைக்க
கைக்கொடுத்தன,
அதற்க்கும் பல தடைகள்...!
போரடியே வாழ்ந்த எம்மக்கள்
தங்கள் உரிமைக்கும், பசிக்கும்
போராடவேண்டிய நிலையில்...!
காலம் தான் பதில் சொல்லும் என்றால்
எங்களின் வாழ்க்கையில்
காலமும் காலாவதி ஆகிவிடும் போல்...!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அழகு

ஆண்களின் காதல்

காத்திருக்கிறேன்