♥அவள் நினைவுகள்♥

பொய் சொல்லி உன்னை நான் நேசிக்கவில்லை
உன்னை விட்டு தூரம் செல்ல நினைக்கவில்லை
என் மனம் ஏனோ
உன்னை தினம் நினைக்குதடி
மழக்காத்தா உன்னையே சுத்துதடி...!

வெள்ளி முளைச்ச என் வானமே
வெற்றிடமாய் போனதடி என் மனசு...!
துள்ளி குதிச்ச வெண்ணிலவே - இப்போ
நீ இருக்கும் திசை தேடுதடி என் மனசு...!

திரையிசை படைக்க வந்த திரவியமே
என் மனக்கடலை வற்ற வைத்ததடி உன் நினைவு...!
சொல்லி தர ஆளில்லா ஆணையமே
சட்டமேற்றி சிறை படுத்துதடி உன் நினைவு...!

நான் நினைக்கும் போதெல்லாம்
கனவில் வந்தவளே...!
ரசிக்க நினைக்கையில்
கனவையே களைத்தவளே...!
காயம் கண்டதடி என் இதயம்
அதில் காணாமல் போனதடி உன் உருவம்...!

கலங்கி விட்டேன் நீ கொண்ட கோபத்தில்
அதை கிள்ளி சென்றுவிட்டாய் நீயே...!
காலம் தாழ்தாதடி
என் அன்பே...!
தினம் தினம் ஏங்குதடி
என் அன்பே...!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆண்களின் காதல்

அவளின் ஏக்கம்

அழகு