போதை

மனதின் வாசலில் மாஇலை தோரணம்
அருகில் தேவதையின் கால் தடம்
எனை வரவேற்க வந்த நிலவின்
கூர்ந்த விழியால் அகம் கிழிந்து போனதே
எங்கிருந்தோ வந்த மணம்
எனை எட்டி எட்டி தேடசொல்லுதே..
மொட்டிலிருந்து பிறந்த மலரே
அவள் புன்னகையில் நானும் கவிழ்ந்தனே
பூமியும் இவள் முகம் கண்டுதான் சூழன்று போனதோ
மது உண்ட மயக்கம் 
மங்கையின் முகம் கண்டும் வருவது ஏனோ..?
விரக்தியில் வீழ்ந்த என்னை 
விழி கொண்டு உயிர்பித்தாலே
எதை கண்டும் உறையாத உள்ளம்
அவள் மதி கண்டு உறைவது ஏனோ..?
விந்தைகள் ஆயிரம் கண்டும் 
கலங்காத நெஞ்சத்தை
வந்தவள் வியப்பை ஊட்டி சென்றாலே
ஒற்றை நொடி புன்னகையில்..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆண்களின் காதல்

அழகு

அவளின் ஏக்கம்