விடியாத இரவுகள்

விடியாத இரவுகள் 
முடியாத பயணங்கள்
துணையாக உலா வரும்
காதலின் கனவிவள்..
துணையேது,
அறிந்திட நினைக்கும் 
நிமிடங்களில்
வாய்மொழியாய் 
பேசிடும் குயிலிவள்...
இந்த இரவுதான் 
கழியுதோ - இல்லை 
கனா தொலையுதோ,
என்று உணரும் நேரமே
உயிரின் உரமிவள்..
சொல்லிலே, 
கிடைக்காத கீர்த்தியும்
பாவனையில் 
மறைத்திடுகிறாள்,
சிந்தனையை 
சிதைத்திடுகிறாள்,
மெழுகு உருகி 
கரைவது பேலே
கன்னி மனம் கரைத்துடுகிறாள்...
பொழுது விடியும் வரை
விழிகள் தாண்டி 
சிந்திக்கவிடாத சிறைக் கொண்டவளாய்
கவந்திழுக்கிறாள், 
இரவின் மடியில்.... மயங்கடிக்கிறாள்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அழகு

ஆண்களின் காதல்

காத்திருக்கிறேன்