ஆண்களின் காதல்
காதல் உன்னுள் வரும் வரை நீயாக இருப்பாய்... உன்னுள் நுழைந்ததும் தீயாக மாறுவாய்... கணக்கு வழக்குயில்லாமல் கவிதைகள் புனைவாய் இலக்கணம் இலக்கியம் பயிலாமல் இதிகாசங்கள் படைப்பாய்...! தேர்வினில் கூட இலக்கணப்பிழை இருக்கும் உன் கவிதைகளில் இருக்காது.....! உன்னையே அறியாமல் உனக்குள்ளே ஒரு ஒளிர்வட்டம் தோன்றும்... அது உந்தன் எதிர்கால வட்டமாகும்...! அவளின் புன்னகையில் மாட்டி தவிக்கும் உணர்வில்லா விட்டில் பூச்சி நீ.......! அவளிடம் சோர்வின்றி பேசுவாய் அவளின் வாக்கு உனக்கு மெய்யாக தோன்றும் அவளின் குரல் குயிலின் குரலை விட இனிமையாக தோன்றும்...........! மங்கையரின் காதல் மங்காத விளக்குகள்....... அதில் சுடர் விட்டு எறியும் தீபம் ஆண்களின் காதல்.....
கருத்துகள்