அவளின் ஏக்கம்

அந்தி பொழுதில் ஆகச வானில்
எந்தையும் என் மனதையும் திருட....!
கணநேரமும் கவியமுதை உட்கொண்டபடியே
என்னை தொடரும் உந்தன் நினைவுகள்.....!

நீயே, என் அன்பின் உணர்வையும்
யான் உன் மீது கொட்ட காதலின் பரிசத்தையும்
என் விழிகள் இடைவிடாது  -  உன்  
வரவையே எதிர்நோக்கிறது என்றுனர்வாயோ...!

காதலின் மதி மயக்கத்தில்
கள்வா உந்தன் பாதம் பணிந்தேன்...!
உள்ளுணர்வில் மகுடம் சூட்டிய மன்னவா
எந்தன் மனதை கொள்ளை கொண்ட என்னவா...!

துள்ளி துள்ளி திரிந்த என் மனதை
துவண்டு போக செய்ததுடா உன் பிம்பம்...!
தூரிகையில்  வரைந்த உன் உருவத்தை
தேடி அலையுதடா என் கண்கள்...!

கண்டேன் கண்டேன் கனவில் கண்டேன்
காலம் கடந்தும் நேசித்த உன்னை....!
ஏங்கி ஏங்கி தினமும் செத்தேன்
உனை நேரில் காணும் தினத்தை எண்ணி...!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆண்களின் காதல்

அழகு

காத்திருக்கிறேன்