என் அன்பே

பொய் சொல்லி
உன்னை நான் ரசிக்கவில்லை
உன்னை விட்டு
தூரம் செல்ல நினைக்கவில்லை
என் மனம் ஏனோ
உன்னை தினம் நினைக்குதடி
மழைக்காத உன்னையே சுத்துதடி....!

வெள்ளி முளைச்ச என் வானமே
வெற்றிடமாய் போனதடி என் மனசு...!
துள்ளி குதிச்ச வெண்ணிலவே - இப்போ
நீ இருக்கும் திசை தேடுதடி என் மனசு...!

திரையிசை படிக்க வந்த திரவியமே
என் திரைக்கடல் வற்றியதடி நினைவாலே...!
சொல்லிதர ஆளில்லா ஆணையமே
சட்டம் இயற்றி சிறைபடுத்துதடி உன் நினைவு...!

நான் நினைக்கும் போதெல்லாம்
கனவில் வந்தவளே...!
ரசிக்க நினைக்கையில்
கனவையே களைத்தவளே...!

காயம் கண்டதடி என் இதயம் - அதில்
காணாமல் போனதடி உன் உருவம்...!
கலங்கி விட்டேனடி உன் அன்பில் - அதை
கிள்ளி போனதடி உன் கோபம்...!

காலம் தால்தாதடி
என் அன்பே...!
தினம் ஏங்குதடி .
என் அன்பே...!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அழகு

ஆண்களின் காதல்

காத்திருக்கிறேன்