உறவே..!


உறவே..! என் உறவே..!
என் இதயத்தை தொலைத்தேனே..!
அடடா..! இந்த நொடி - என்
உணர்வையும் தொலைத்தேனே..!
இந்த கனவு தான் நீளுதே
பொழுது முடியும் முன் 
வந்துவிடு நேரிலே..!
உன்னை காணவே 
காத்திருக்கிறேன் காலமெனும் கரையிலே..!
என் உயிரே..!
உன் அருகே என்னை நீயும் காண்பாயா 
உனதருகே என் ஜீவன் உலாவுதடி..!
எனக்கான விடியல் - உன் 
மடியில் உள்ளதடி..!
உன்னை தவிர எனக்கு இங்கு 
யாரடி துணை உயிரே..!
கண்களின் ஓரமாய் கண்ணீர் துளிகள்
உன்னை காணாமல் - என் 
மனதின் மத்தியில் உயிர் துளிகள்..!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அழகு

ஆண்களின் காதல்

காத்திருக்கிறேன்