காட்டுச் சிறுக்கியே...!


காட்டுச் சிறுக்கியே...
என்னை கட்டிப் போனதென்னடி...
கம்புக் காட்டுக்குள்ள 
சோளம் என்னை தின்னுதோ...

சோளப்பொறியா நீயும்
என்னை பொறித்து தள்ளுறியே...

நானும் உன்னில்
நெருப்பில் வாட்டிய சோளமாய்
மொரு மொருனு தான் இருக்கேன்
வந்து தின்னுட்டு போயேன்டி...

நிலவும் சுடுதே
நித்தம் உன்னை ரசிப்பதால்...
பங்குனியும் குளிருதே
உந்தன் நெருக்கம் என்னை வாட்டுவதால்...

சித்திரையில் பூ முடித்த பெண்ணே
நித்திரையிலும் நானே உன்னோடு...
நீங்காத எண்ணங்களாய் நீயும்
என் நெஞ்சின் நினைவுகளோடு...

அதிகாலை பூத்த மலரே
சூரியனும் ஒளிந்து கொள்ளுதே
உந்தன் பரிசமெனும்
புன்னகை தேசத்தில்...

எந்தன் நேசத் திரவியமே
திகட்டாத தென்றலாய்
நீயும் பேச பேச 
தேன் இனிக்குதே எந்தன் காதில்...

நித்தமும் நீயே வேண்டும்
என் உயிரோடு உறவாட...
உள்ளம் எனும் காட்டினிலே
விளக்கேற்ற வந்த காட்டுச் சிறுக்கியே...!



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அழகு

ஆண்களின் காதல்

காத்திருக்கிறேன்