கடைசி வரி
ஒரு வேளை நான்
மரணமடைந்துவிட்டால்
என்னால் எழுதிய
எழுத்துகளை அழித்துவிடாதீர்கள்
அவை அனைத்தும்
நான் என் சுயநினைவோடு
உங்களுக்காக
உங்கள் நினைவுகளோடு
தேடி சேகரித்த வார்த்தைகள்
சேதபடுத்திவிடாதீர்கள்
பிற்காலத்தில் யாரோ
யாருக்கோ எழுத
போகின்ற
சிறு நினைவுகளில்
என் எழுத்துகளும்
இருந்துவிட்டு போகட்டும்...
உங்கள் அழைப்பேசியில்
என் தொலைப்பேசி எண் சேமிப்பில் இருக்கும்
தொல்லை என்று
தொலைத்துவிடாதீர்கள்
உங்கள் மனதில்
இல்லாத என் பெயர்
உங்கள் தொ(ல்)லைப்பேசிலாவது
இருந்துவிட்டு போகட்டும்..
என் நினைவை அழிக்க
சிரம படாதீர்கள்
வாய்விட்டு ஒருமுறை
கத்திவிட்டு சொல்லுங்கள்
உங்கள் இதயத்தில் இல்லை
உங்கள் நினைவில் கூட
வரமாட்டேன்..
ஒளிக்கோப்பாய் பிற்கால
நியாபகத்திற்காக
எடுக்கப்பட்ட
புகைப்படங்களை
அழித்துவிடாதீர்கள்
ஒரு நாள் நினைவு வரலாம்
இவன் நம் நண்பன் என்று
அன்று அனைத்தையும்
குழி தோண்டி புதைத்து விடுங்கள்
நான் இறந்து சாம்பலான பின்..
என்ன இருந்து
என்ன புண்ணியம்
நிகழ்காலத்தில்
நிம்மதி இல்லையென்றால்
நித்திரையிலே
உன் மத்திரையிலே
நான் சடலமாக
வாழ விரும்பாத
இதயத்தின்
வேண்டுகோள்...
நிறைவேற்றிவிடுங்கள்
ஆயிரம் ஆசைகளில்
கடைசி ஆசை...
✍️அமரகவி
![]() |
என் காதலின் கடைசி வரி |
கருத்துகள்