என்னில் நீ
வானம் தொடாத மேகங்கள்
வர்ணம் பூசாத வானவில்
மழைத்துளி விழாத மண்வாசனை
புயலாய் வந்த தென்றல்
பூக்கள் மலராத சுவாசம்
வண்டுக்கள் அருந்தாத தேன்
மௌனம் நிறைந்த கவிதை
எதிர்பாராத வாழ்க்கை
அத்தனையும் ஒரே ஜென்மத்தில்
முடிந்துவிட்டது என எண்ணுகையில்
விருச்சமாய் முளைத்த - என்
வாழ்வின் மிச்சம்
என்னில் உறைந்த நீ..
கருத்துகள்