உள்ளம்

 உன்னாலே வாழ்ந்தேன் நானே..! உன் உணர்வோடும் உயிரோடும் கலந்தேன் நானே..!

உன் முகம் காணாமல் இருந்ததே இல்லை இன்று கனவிலும் தொலைத்தேன் உன்னை..

அலாரம் வைத்தும் எழுந்ததும் இல்லை சேவல் கூவியும் எழுந்ததும் இல்லை உன் குறல் கேட்டே விடியும் என் பொழுது

உனக்காக என் உயிரையும் தருவேன் என்றேன் இன்று உனை நீங்கி என் உயிர் யாருக்கு இருக்கிறது..

எழும்பில்லா நாக்கு எப்படியும் பேசும் நீயா பேசியது என்று நாக்கும் கேட்கும்..

என் உயிரிலே கலந்த உன்னை உடலை பிரித்து உலகம் தனித்து பிரிந்தேன் இன்று...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆண்களின் காதல்

அழகு

காத்திருக்கிறேன்